தர்ணா போராட்டம் செய்த விஷால்: வேட்புமனு நிராகரிப்பின் பின்னணி?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுகிறார் என செய்திகள் வெளியான வேளையில் அதனை மறுத்துப் பேசிய விஷால், திடீரென ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்தார். விஷாலின் திடீர் அரசியல் வருகை எங்களை பாதிக்காது என்பதே மற்ற அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்தது. இந்நிலையில் இன்று விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்பால் தான் இது நடந்ததாக கூறப்படுகிறது. அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் விஷால். அங்கிருந்த காவல்துறையினர் விஷாலை சமாதானப்படுத்தி பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அதனால் உடனடியாக போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரு நபர் தேர்தலில் நிற்க அந்தத் தொகுதியை சேர்ந்த 10 நபர்கள் ஆதரவு தரவேண்டும். விஷாலுக்கு ஆதரவளித்த இருவரின் கையெழுத்து போலியானது, அவர்கள் ஆர்.கே.நகர் தொகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்ற காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 131 வேட்பாளர்களின் மனுவில் 62 நபர்களின் வேட்புமனு மட்டுமே ஏற்கப்படுள்ளது. இதுகுறித்து விஷால், “எனது ஆதரவாளர்களை மிரட்டியிருக்கிறார்கள். இளைஞர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாதா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தேர்தல் அதிகாரி வேலுச்சாமியுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விஷால் அரசியலில் இறங்குவது பற்றி கவலையில்லை என்று கூறிய திமுக, அதிமுக தரப்பு ஏன் வேட்புமனு குறித்து கேள்வி எழுப்ப வேண்டும். அதேபோல் தீபாவின் வேட்புமனுவும் மறுக்கப்பட்டுள்ளது. அவரும் அதிமுக-வின் தலையீட்டால் தான் எனது வேட்புமனு மறுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*