நான் தீவிரவாதி அல்ல: கைது செய்யப்பட்ட காஞ்சா அய்லய்யா?

குஷ்பு மீது மதச்சாயம் பூசும் பாஜக?

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

எழுத்தாளர் மற்றும் தலித் உரிமை ஆர்வலரான காஞ்சா அய்லய்யாவை நேற்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆட்டிடையர்களின் இரண்டாம் மாநில மாநாட்டில் கலந்துகொள்ள வந்த காஞ்சா அய்லய்யாவை கைது செய்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பதட்டம் நிலவியது.

காஞ்சா அய்லய்யா கைது குறித்து மாநாடு ஒருங்கிணைப்பாளர்களிடம் துணைக் கமிஷ்னர் கணேஷ், “காஞ்சா அய்லய்யாவை கலந்துகொள்ள அனுமதித்தால் இந்த மாநாடு நடைபெறாது, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என தெரிவித்தார். எனினும் காவல்துறையை கைது செய்யவிடாது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், மாநாடுக்கு வந்தவர்களும் மனிதக் கேடயமாக மாறி தடுத்தனர். ஆனால் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு அய்லய்யாவை கைது செய்து ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அய்லய்யா, “நான் தீவிரவாதி இல்லை, எந்த ஆயுதத்தையும் எடுத்துச் செல்லவில்லை. என்னை கைது செய்ததற்கான காரணத்தை காவல்துறையினர் கூற வேண்டும். அரசாங்கம் வழங்கிய ஆடுகளில் 60% இறந்துவிட்டது. அதனால் ஆட்டிடையர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதுகுறித்து விவாதிக்கதான் அந்த மாநாடுக்கு சென்றேன்” என்று தெரிவித்தார்.

காஞ்சா அய்லய்யாவின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஆட்டிடையர்கள் மாபெரும் ஊர்வலம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. காவல்துறை தரப்பில் இருந்து அய்லய்யாவை கைது செய்ததற்கான நியாயமான காரணங்கள் ஏதும் கூறப்படவில்லை.

 

அரவிந்த் கெஜ்ரிவால் – அப்துல் கலாம்: விஷால் அரசியல் உத்வேகம்?

பாதியில் வெளியேறிய பாலகங்கா:மதுவை தோற்கடித்த திரளும் அதிமுக..!

எதிர்ப்பு : ஆர்.கே.நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மதுசூதனன்..!

ஆர்.கே.நகர் :இரண்டாம் இடத்திற்கு போட்டியிடும் அதிமுக?

ஆர்.கே.நகரில் பாலகங்காவை களமிரக்கும் எடப்பாடி பழனிசாமி:தர்மயுத்தம் Part -2

செவிலியர் போராட்டம் முடித்து வைக்கப்பட்ட கதை:அ.மார்க்ஸ்

மிரட்டி பணிய வைக்கப்பட்ட செவிலியர்கள்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*