மணிரத்னம் படத்தில் சிம்பு நடிப்பாரா?

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படப் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார் சிம்பு. அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், சிம்புவால் படத்தில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதென தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். தயாரிப்பாளர் சங்கம் சிம்பு மீது நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் மணிரத்னம் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்நிலையில் இதில் சிம்பு நடிப்பாரா என சந்தேகம் எழுந்தது, அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “நான் மணிரத்னம் படத்தில் நடிப்பதை தடுக்க பலரும் முயற்சி செய்கின்றனர். அவர்கள் கிளப்பும் பிரச்சனைக்கெல்லாம் நான் பதிலளிக்க விரும்பவில்லை. வரும் ஜனவரி 20-ஆம் தேதி முதல் மணிரத்னம் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் முழு விபரங்களை நாளை அவர் இசையமைப்பில் உருவான ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் பாடல் வெளியீட்டில் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*