கேரள மீனவர்களுக்கு 20 லட்சம் இழப்பீடு கேரள அரசு அறிவிப்பு..!

விஷால் ஆதரவு பெண்ணை கடத்தியதில் தேர்தல் அதிகாரிக்கு தொடர்பா?

வீட்டுப் பெண்களை மிரட்டிய மதுசூதனன் அணி: விஷால் ஆதரவாளர் தகவல்

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

ஓக்கி புயலுக்கு பலியான கேரள மீனவர்களுக்கு 20 லட்ச ரூபாய்  வழங்குவதாக கேரள அரசு அறிவித்துள்ளது.கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ள கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. தற்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலினால் மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்த புயல் காரணமாக காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், புயலின் கோர தாக்குதலால் அதிகளவிலான படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று வரை கேரளாவில் மட்டும் 31 மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*