போலி வாக்காளர்கள் திமுக வழக்கு!

விஷால் ஆதரவு பெண்ணை கடத்தியதில் தேர்தல் அதிகாரிக்கு தொடர்பா?

வீட்டுப் பெண்களை மிரட்டிய மதுசூதனன் அணி: விஷால் ஆதரவாளர் தகவல்

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

ஒரே நாளில் 110 பேர் வேட்புமனு தாக்கல்..!

ஆர்.கே.நகர் தொகுதியில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்று தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனை நேற்று முடிவடைந்தது. நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பால் நள்ளிரவு வரை ஆர்.கே.நகர் தொகுதி பரபரப்புடன் காணப்பட்டது. முன்னதாக தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மருதுகணேஷ், ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்றும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் இதனால் போலி வாக்காளர்களை நீக்க ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து 45 ஆயிரம் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியது. இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்றும் 5,117 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை என்று தி.மு.க வேட்பாாளர் மருதுகணேஷ் சார்பில்  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்பு இன்று முறையிடப்பட்டது. இதையடுத்து, இந்த முறையீட்டை மனுவாகத் தாக்கல்செய்ய அறிவுறுத்தப்பட்டதோடு, வேறு அமர்வு நாளை விசாரிக்க உத்தரவிட்டது.

மீனவ மக்களிடம் ஸ்டாலின்..!

நான் அரசியல்வாதி அல்ல :விஷால்

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*