மும்பை: போலீஸிடமிருந்து தஷ்வந்த் தப்பி ஓட்டம்

மும்பையில் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பிச் சென்றுவிட்டான் தஷ்வந்த்.

சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமைப்படுத்தி கொலை செய்த வழக்கில் கைதான தஷ்வந்தை ஜாமினில் எடுத்தார் அவனது தந்தை. ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை கொலை செய்துவிட்டு, 25 சவரண் நகையோடு தலைமறைவானான். அவனை தனிப்படை அமைத்து தேடிவந்த காவல்துறையினர், நேற்று மும்பையில் அவனை கைது செய்தனர். இந்நிலையில் காவல்துறையினர் பிடியில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறான். ஹாசினியின் தந்தை எவ்வளவோ கூறியும் அவனுக்கு ஜாமின் வழங்கியது தான் அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*