உதயசூரியனுக்கு பிரஷர் கொடுக்கும் ‘பிரஷர் குக்கர்’?

கதறும் மீனவ மக்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுகவின் உதயசூரியனுக்கு போட்டியாக டிடிவி தினகரனின் பிரஷர் குக்கர் சின்னம் அமைந்துள்ளது. இது பண்பாடு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆர்.கே.நகரில் வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவங்குகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி, டிடிவி தினகரன் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுகவை காட்டிலும் டிடிவி தினகரனுக்கு அந்தப் பகுதியில் அதிக செல்வாக்கு இருக்கிறதென லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

திமுகவுக்கு 33% வாக்குகளும், டிடிவி தினகரனுக்கு 28% வாக்குகளும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பு கூறுகிறது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் பாஜக இருக்கின்றது. எனவே உதயசூரியனுக்கு போட்டியாக பிரஷர் குக்கர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி இந்த கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

விஷாலுக்கு கையெழுத்திட்ட பெண்ணை கடத்தி மிரட்டிய மதுசூதனன்..!(#Audio)

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

மருத்துவ பரிசோதனைக்கு 35% கமிஷன்?: வருமான வரித்துறை தகவல்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*