ராஜஸ்தான்: சென்னை போலீஸை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்?

ஜல்லிக்கட்டு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!

ஆர்.கே.நகர் தேர்தலை நேர்மையாக நடத்துமா ஆணையம்?

ராஜஸ்தான்: ஜெய் தரன் கிராமம், சென்னை காவல்துறை மேலாளர் பெரிய பாண்டி சில கொள்ளையர்களால் இன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

சமீபத்தில் சென்னை காவல்துறையினர் நான்கு கொள்ளையர்களை கைது செய்தனர். கொளத்தூர் அருகே 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது இந்த கும்பல்.
அதன் முக்கிய குற்றவாளி ராஜஸ்தானில் உள்ள ஜெய் தரன் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மதுரவாயல் காவல்துறை மேலாளர் பெரிய பாண்டி மற்றும் சில காவலர்கள் ஜெய் தரன் கிராமத்துக்கு சென்றிருக்கின்றனர். இன்று 2.30 மணியளவில் முக்கிய குற்றவாளி இருக்கும் வீட்டை அடைந்தபோது, அங்கிருந்த சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் பெரிய பாண்டியின் குழு படுகாயம் அடைந்தனர்.

சென்னை காவல்துறையினரிடம் பாதுகாப்புக்கு இரண்டு துப்பாக்கி இருந்தது. ஆனால் அவர்கள் இந்த தாக்குதலை எதிர்பார்க்கவில்லை, பின்னர் அங்குள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி பெற்றனர். இதில் காவல்துறை மேலாளர் பெரிய பாண்டி மருத்துவமனை செல்லும் வழியில் உயிர் இழந்தார். பிரேதப் பரிசோதனை முடிந்ததும் அவரது உடலை வாங்க உறவினர்கள் ராஜஸ்தான் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன், “ராஜஸ்தானில் உள்ள உயர் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். ராஜஸ்தான் காவல்துறையினர் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றனர். காயமடைந்த காவலர்கள் தற்போது நிலையாக இருக்கின்றனர். சென்னை காவல்துறைக்கு இது மாபெரும் பின்னடைவு, இதிலிருந்து நாங்கள் சில விஷயங்களை கற்றுக்கொள்வோம்” என்று தெரிவித்தார். ராஜஸ்தான் காவல்துறையினர் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மீனவர்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்: அரசியல் பின்னணி?

கதறும் மீனவ மக்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*