சன்னி லியோன் வருகை: தற்கொலை மிரட்டல் விடும் யுவ சேனா?

தமிழ் சினிமா: சம்பளத்தை ஏற்றினார் சன்னி லியோன்?

நட்சத்திர விழா: படப்பிடிப்புகள் ரத்து?

அட்லியை கலாய்த்த ‘பலூன்’ இயக்குனர்

புத்தாண்டை முன்னிட்டு வரும் டிசம்பர் 31 இரவு பெங்களூரில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சன்னி லியோனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். இதற்கு கர்நாடக ரக்‌ஷன வேதிக யுவ சேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டம் நடத்தினர். சன்னி லியோனின் போஸ்டர்களை எரித்ததோடு, அவர் நிகழ்ச்சிக்கு வந்தால் மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து யுவ சேனா அமைப்பின் தலைவர், “சன்னி லியோன் அரைகுறை ஆடை அணிவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சேலை அணிந்து வந்தால், நாங்களும் கூட பங்கேற்க தயார். அவரது கடந்த கால வாழ்க்கை மோசமானது. இதுபோன்ற பெண்களை நாங்கள் ஊக்குவிக்க விரும்பவில்லை. அதையும் மீறி அவர் கலந்துகொண்டால், நாங்கள் தற்கொலை செய்யவும் தயங்க மாட்டோம்” என்று தெரிவித்தார்.

ஆனால் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், “இந்த நிகழ்ச்சி குடும்பத்தோடு அனைவரும் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சன்னி லியோன் ஆபாசமாக உடையணிந்து வரமாட்டார், பெங்களூரின் கலாச்சாரத்தை மனதில் வைத்தே இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இவர்கள் எதற்காக எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என புரியவில்லை” என்று கூறினார். இதனால் இந்த நிகழ்ச்சியை தற்போதைக்கு தடை செய்துள்ளது அரசாங்கம், நிகழ்ச்சி நடைபெறுவது சந்தேகத்தில் உள்ளது. பெங்களூர் மட்டுமல்லாது இதுபோன்று பல இடங்களிலும் கலாச்சார காவலர்களால் பிரச்சனையை சந்தித்து வருகிறார் சன்னி லியோன்.

மாறாத சமூகம்: சங்கர் ஆணவக்கொலை பற்றிய படம் (#Poster)

டிமானிடைசேஷன் திட்டத்தோடு முடியும் ‘பார்ட்டி’ (#Video)

சென்னையோட அன்னை நம்ம குப்பம் தானே (#உருவாக்க_வீடியோ)

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*