பெரிய பாண்டியன் உயிரிழப்பு: காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது வழக்கு?

ராஜஸ்தான்: சென்னை போலீஸை சுட்டுக்கொன்ற கொள்ளையர்கள்?

ஆய்வாளர் பெரியபாண்டி கொலையில் சந்தேகங்கள்…!

காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

கொளத்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நடந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான நாதுராம் உள்ளிட்ட 2 பேரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கடந்த 8-ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் சென்றனர். கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், போலீஸ் ஏட்டுகள் எம்புரோஸ், குருமூர்த்தி, முதல்நிலை காவலர் சுதர்சன் ஆகியோர் இந்தக் குழுவில் இருந்தனர். நாதுராம் ஜெய் தரன் கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, தனிப்படை குழு அந்த இடத்துக்கு சென்று சுற்றி வளைத்தனர், அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பெரிய பாண்டியன் உயிரிழந்தார்.

இந்நிலையில், பெரியபாண்டியனின் உடலில் பாய்ந்தது மற்றொரு ஆய்வாளர் முனிசேகரின் துப்பாக்கி குண்டு என ராஜஸ்தான் காவல்துறை நேற்று தெரிவித்தது. பெரிய பாண்டியனை காப்பாற்ற முயன்றபொழுது தவறுதலாக முனிசேகர் சுட்டுள்ளார் என பாலி மாவட்ட எஸ்.பி. கூறியுள்ளார். அதனால் இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல் துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அஜாக்கிரதையாக இருந்ததன் மூலம் உயிரிழப்பு ஏற்படுத்தியதன் கீழ் முனிசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவர் மரணங்கள்: இழப்பீடு நாடகமா? டி.அருள் எழிலன்

பாலிவுட்டில் மியா: கலாச்சார காவலர்களின் எதிர்ப்பு இருக்குமா?

நயன்தாராவின் ‘யூடர்ன்’: மக்கள் நிதியில் உருவாகுமா ?

விராட் கோலி – அனுஷ்கா திருமணம் (#video)

தமிழ் ராக்கர்ஸை கலாய்த்த ‘தமிழ்ப் படம் 2.0’?

மீண்டும் ரசிகர்கள் சந்திப்பு: அரசியலுக்கு வருவாரா ரஜினி?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*