ஒகி புயல் பாதிப்பு: மோடியின் தாமத சுற்றுப்பயணம்

மீனவர்களை கண்டுகொள்ளாத அரசாங்கம்: அரசியல் பின்னணி?

கதறும் மீனவ மக்கள், கண்டுகொள்ளாத தமிழக அரசு

தமிழ்நாடே வேண்டாம்:குமரி மீனவர்களின் குமுறல்-video!

‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கேரளா, லட்சத்தீவு மற்றும் குமரி மாவட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை பார்வையிடுகிறார்.

அரபிக்கடலில் உருவான ‘ஒகி’ புயல் கடந்த 30–ஆம் தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் குமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது, கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மற்றும் கேரள கடற்கரை பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற பல மீனவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்த மீனவர்களில் பலரது உடல்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதேபோல் லட்சத்தீவிலும் பல பகுதிகள் இந்த புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கும் கடற்கரை பகுதிகள் மிகுந்த சேதமடைந்திருக்கிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரியை பொறுத்தவரை மத்திய – மாநில அரசாங்கங்களிடம் இருந்து முறையான உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை. மீட்பு பணி நடைபெறுவதிலும் தாமதம் என மீனவ மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். நூற்றுக்கணக்கான மீனவர்களின் உயிரை பறித்த ‘ஒகி’ புயல் பாதிப்பை தேசிய பேரழிவாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் புயல் தாக்கி இரண்டு வாரம் முடிந்த பிறகு அந்த பகுதிகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காகவும் நரேந்திர மோடி நாளை குமரி, கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*