சூர்யா படத்தில் சாய் பல்லவி?

‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்துக்கு பிறகு செல்வராகவன் படத்தில் சூர்யா பணிபுரிய உள்ளார். இதில் கதாநாயகியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கை புக் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சாய் பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

‘பிரேமம்’ எனும் மலையாள திரைப்படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவி, அதன்பிறகு ‘ஃபிடா’ எனும் தெலுங்கு படத்தில் நடித்து மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார். தற்போது அவர் தெலுங்கில் நடித்த ‘எம்சிஏ’ மற்றும் தமிழில் நடித்த ‘கரு’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில் சூர்யா படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதில் நடித்தால், சாய் பல்லவியின் மார்க்கெட் தமிழிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*