வீடியோ வெளியிட்டது தினகரனுக்கு தெரியாது?

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. தேர்தலை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கக்கூடிய வகையில் அமைந்திருக்கும் வீடியோ காட்சிகளை ஒளிபரப்பக்கூடாது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை ஒளிப்பரப்புவதை நிறுத்த வேண்டும் என ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் புகாரின் அடிப்படையில், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரனின் மற்றொரு நெருங்கிய ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன், டிடிவி தினகரனுக்கு தெரியாமல் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது என கூறிஉள்ளார்.
வீடியோவை கண்டு பயப்படுவது ஏன்..? தினகரனுக்கு தெரியாமல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோ மூலம் மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டது. வீடியோ தொடர்பாக எந்த வழக்கையும் சந்திக்க தயார் என தங்க தமிழ்செல்வன் கூறிஉள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*