கனிமொழி எங்கள் செல்லப்பிள்ளை: கி.வீரமணி

2-ஜி வழக்கில் விடுதலையான தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சென்னை பெரியார் திடலில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கனிமொழிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரித்ததோடு, ‘தந்தை பெரியார்’ புத்தகத்தை அன்பளிப்பாக வழங்கினார் கி.வீரமணி. அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “எங்களை பொறுத்தவரையில் கனிமொழி செல்லப்பிள்ளை. அவர் கொள்கை ரீதியாக ஒரு தலைசிறந்த பகுத்தறிவுவாதியாக குழந்தைப் பருவத்தில் இருந்து வளர்க்கப்பட்டவர். இன்னமும் அந்த கொள்கையில் இருந்து கொஞ்சம் கூட மாறாதவர். அண்ணா- கருணாநிதி வழியில், தி.மு.க.வை வழி நடத்தி செல்லும் மு.க.ஸ்டாலினுக்கு, கனிமொழி எம்.பி. உறுதுணையாக இருப்பார்” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*