தினகரனை சுக்ரீவனோடு ஒப்பிட்ட சுவாமி..!

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டு வந்தார். தன் கட்சி வேட்பாளர் தேர்தல் களத்தில் இருந்தாலும், தினகரனுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தினகரனை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்ரமணியன் சுவாமி தினகரனுக்கு ஆதரவு அளித்தது அனைவராலும் கவனிக்கப்பட்டது.
இந்த நிலையில், தினகரனுக்கு ஆதரவு கொடுப்பது ஏன்? என்பதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  சுப்ரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “ ஆர்.கே நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட ‘பாவியான’ டி.டி.வி.க்கு முன்னுரிமை அளிக்கிறேன் என கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் என படியுங்கள் என்று கூறினேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*