விக்ரம் பற்றிய வதந்திகள்?

விக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய இரு படங்கள் வெளியாகவுள்ளன. தற்போது அவர் ஹரி இயக்கும் ‘சாமி-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் வெவ்வேறு இயக்குனர்களுடன் பணிபுரிய இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இதற்கு விக்ரம் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பிஎஸ் மித்ரன், விக்ரமிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கிவிட்டார் என தகவல்கள் வெளியானது. அதன்பிறகு ‘பட்டியல்’ இயக்குனர் விஷ்னுவர்தன், விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளதாக செய்திகள் பரவியது. ஆனால் இவை இரண்டுமே வதந்தி என்கிறது விக்ரம் தரப்பு. அவர் ‘சாமி-2’ படத்துக்கு பிறகு எதிலும் புக் செய்யப்படவில்லை என்கின்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*