தமிழக அரசுக்கு மூன்று மாத கெடு விதித்த தினகரன்?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன், நேற்று சபாநாயகர் ப.தனபால் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி, “ஒரு சிலரின் தவறான எண்ணங்களால் அ.தி.மு.க. சோதனைகளை சந்தித்து வருகிறது. பல பேரை கட்சியில் இருந்து நீக்குகிறார்கள். கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டவர்களே மற்றவர்களை நீக்குகிறார்கள். நீக்கவேண்டும் என்றால் உங்களில் 5 அல்லது 6 பேரை தவிர கட்சியில் உள்ள 1½ கோடி தொண்டர்களையும் நீக்க வேண்டும். தோல்விக்கு பின்னர் ஏற்பட்ட பயம், பதற்றத்தில் என்ன செய்கிறார்கள்? என்று அவர்களுக்கு தெரியவில்லை. கட்சியில் இருந்து நீக்குவதன் மூலம் யாரையும் பயமுறுத்த முடியாது. அவர்களே எங்களை நோக்கி புறப்பட்டுவிட்டார்கள். வழிவிட்டால் வருங்காலம் உங்களை மன்னிக்கும். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போது எங்களுடைய ஸ்லீப்பர் செல்கள் அவர்களின் வேலையை செய்வார்கள். ஜனவரி இறுதிக்குள் எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வரும். பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும். 3 மாதங்களுக்கு மேல் இந்த ஆட்சியை தக்கவைக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*