ஆன்மிக அரசியல் பற்றி ரஜினி விளக்கம்

அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட பின்னர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார். அங்கே பத்திரிகையாளர்களை சந்தித்த அவரிடம், ஆன்மிக அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதுகுறித்து அவர், “ஆன்மிக அரசியல் என்பது தர்மமான, நியாயமான அரசியலாக இருக்கும்.விரைவில் மக்களை சந்தித்து பேச உள்ளேன். அப்போது எனது அரசியல் கொள்கைகள் குறித்து விளக்கி கூறுவேன். எனது அரசியல் பயணம் தெளிவானதாக இருக்கும். எனது அரசியல் பிர வேசத்தை வரவேற்று வாழ்த்து கூறிய கமலுக்கும் மற்றவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*