மெர்சல் 75-ஆவது நாள்: டிரெண்டிங் டேக்ஸ்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘மெர்சல்’. விஜய் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. மருத்துவத்துறையில் நடக்கும் அநியாயங்கள் குறித்து இந்த கதை அமைந்திருந்தது. பாஜக அரசாங்கத்தை விமர்சித்ததால், எச்.ராஜா மற்றும் தமிழிசை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் படத்துக்கு அது மாபெரும் பலமாகி வசூலை அள்ளத் துவங்கியது. உலகம் முழுவதுமாக 250 கோடிக்கு மேல் வசூல் செய்து, விஜய் படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற இடத்தை பிடித்தது. இந்நிலையில் இதன் 75-ஆவது நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

‘மெர்சல்’ படத்தின் 75-ஆவது நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெவ்வேறு ஹாஸ்டேக்களை பதிவு செய்து வருகின்றனர். #atlee, #vijay, #mersal, #aazhaporan_tamilan என டிரெண்டிங் ஆகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*