ரஜினிகாந்த் ஒரு படிப்பறிவில்லாதவர்: சுப்பிரமணியன் சுவாமி

நடிகர் ரஜினிகாந்த் வருகிற சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி துவங்கி நிற்கப் போவதாக அறிவித்தார். அவருடைய அரசியல் பிரவேசத்திற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. தமிழக பாஜக-வினர் அவருடைய அரசியல் அறிவிப்பை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவருரான சுப்பிரமணியன் சாமி, ரஜினிகாந்த் ஒரு படிப்பறிவில்லாதவர், ஊழல்வாதி என விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர், “ரஜினிகாந்த் படிக்காதவர். அவரிடம் நம்மிடம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இதுவும் தமிழ் நடிகர் அரசியலில் இணைந்தார் என கூறும் ஒரு பழைய கதை மட்டும்தான். நான் எப்போதும் ரஜினிக்கு எதிர்ப்புதான் தெரிவிக்கிறேன். சினிமா நட்சத்திரங்களை என்று மக்கள் விடுவிக்கிறார்களோ அப்போதுதான் தமிழகத்தின் நிலையானது முன்னேறும். அவர் இன்னும் அவருடைய கட்சியை அறிவிக்கவில்லை. பாரதீய ஜனதாவுடன் எல்லாம் அவரை கூட்டணி அமைக்கவிட மாட்டேன். தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். அவருடைய கருப்பு பண விஷயம் விசாரணைக்கு வந்ததும் அவர் கவலையடைவார்” என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*