ரஜினியின் ஆன்மீக அரசியல் சர்ச்சை?

தனிக்கட்சி துவங்குவதை உறுதி செய்த ரஜினி, சாதி மதத்துக்கு அப்பாற்பட்டு ஆன்மீக அரசியலை செயல்படுத்துவேன் என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.

திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி)

ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை கூறி கடவுள் நம்பிக்கை உள்ள மக்களின் ஆதரவை பெற நினைக்கிறார் என்றே எண்ணுகிறேன் என தெரிவித்துள்ளார்.

கீ.வீரமணி (திராவிட கழகம்)

ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை பற்றி ரஜினி தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

ஆன்மீக அரசியல் என்பது மதவாத அரசியலாக தான் இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் பாஜக தலைவர் ஹெச்.ராஜா, ரஜினியின் ஆன்மீக அரசியல் வரவேற்கதக்கது என தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*