”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்
தினகரனுக்கு எதிராக திமுக தீர்மானம்..!வருங்காலம் எங்களை விடுவிக்கும்:உதயகுமாரன்

“ஆவரேஜ் வாழ்க்கையைக்கூட வாழ முடியல” -தருமபுரி திவ்யா..!

முத்தலாக் சட்டம் :ஸ்டாலின் கண்டனம்..!

பெங்களூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. பிரகாஷ்ராஜ்ஜின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக சமூக வலைதளங்களில் பிரகாஷ் ராஜ்ஜை விமர்சித்து மீம்ஸ்களும் கருத்துக்களும் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், பிரகாஷ்ராஜ் கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என தான் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ள பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:- “ தகுதி வாய்ந்த நபர் நாட்டின் எந்த மாநிலத்திற்கும் தலைவராகலாம் என்பதே ஒரு இந்தியனாக தனது நிலைப்பாடு.

கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட எந்த மாநிலமாக இருந்தாலும் மிகவும் மோசமான பிரித்தாளும் தன்மை கொண்ட, வகுப்புவாத அரசியல்வாதிகளை வரும் தேர்தல்களில் வெற்றி பெற விடமாட்டோம் என்றே பெங்களூருவில் கூறினேன். தன்னுடைய பேச்சை திரித்து பிரசாரம் செய்து தனக்கெதிராக வெறுப்புணர்வை தூண்டுவதன் மூலம் பயம் மற்றும் விரக்தி மனநிலையையே உறுதிப்படுத்துகிறீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*