ஒரு மணி நேரத்தில் ஆறு கொலை: முன்னாள் இராணுவ அதிகாரி கைது?

ஹரியானா மாநிலம் பல்வாள் பகுதியில் உள்ள அரசு மருத்துவனையில் ஆறு நபர்கள் கொலை செய்யப்படிருக்கிறார்கள். நரேஷ் தன்கத் எனும் முன்னாள் இராணுவ அதிகாரிதான் இந்த கொலைகளை செய்ததாக தெரிய வந்துள்ளது. இரவு 2.30 – 3.30 மணியளவில் அத்தனை கொலைகளும் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

நரேஷ் தன்கத் மனநிலை சரியில்லாத நபர், தன்னார்வமாக ஓய்வு பெற்றவர். 2.30 மணியளவில் இரும்பு தடியுடன் அவர் மருத்துவமனையில் நுழைவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மருத்துவமனை வாசலில் பிச்சையெடுக்கும் நபர், பாதுகாப்பு அதிகாரி, 35 வயது மதிக்கதக்க பெண் உட்பட ஆறு நபர்களை கொலை செய்திருக்கிறார். மருத்துவமனையை சுற்றி 2 கிமீ பரப்பளவுக்குள் இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராவை ஆதாரமாக வைத்து நரேஷ் தன்கத் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பல்வாளில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*