வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

தினகரனுக்கு எதிராக திமுக தீர்மானம்..!

வருங்காலம் எங்களை விடுவிக்கும்:உதயகுமாரன்

“ஆவரேஜ் வாழ்க்கையைக்கூட வாழ முடியல” -தருமபுரி திவ்யா..!

முத்தலாக் சட்டம் :ஸ்டாலின் கண்டனம்..!

வெளியுறவு செயலாளராக 2015–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட எஸ்.ஜெய்சங்கரின் பணிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்தது. அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. அவர் வருகிற 29–ந் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, புதிய வெளியுறவு செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். 2 வருட காலத்துக்கு அவர் இப்பொறுப்பை வகிப்பார்.

இவர் 1981–ம் ஆண்டு, இந்திய வெளியுறவு பணி (ஐ.எப்.எஸ்.) அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர் ஆவார். தற்போது, வெளியுறவு அமைச்சகத்தில் செயலாளராக (பொருளாதார உறவு) பணியாற்றி வருகிறார். ஏற்கனவே, சீனாவுக்கான இந்திய தூதராகவும் இருந்துள்ளார்.

கோகலே நியமனத்துக்கு மத்திய மந்திரி சபையின் நியமன குழு ஒப்புதல் அளித்திருப்பதாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தனது உத்தரவில் கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*