“யுத்தம்,பொய்களால் 2017-ஆம் ஆண்டு அழிக்கப்பட்டு விட்டது:போப் பிரான்சிஸ்

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

புத்தாண்டை முன்னிட்டு வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் நேற்று முன்தினம் மாலை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட போப் பிரான்சிஸ், பேராலயத்தில் திரண்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

2017-ம் ஆண்டு யுத்தம் மற்றும் பொய்கள், அநீதிகளால் அழிக்கப்பட்டு விட்டது. மனிதாபிமானம் வீணடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டு விட்டது. யுத்தம் என்பது பாரபட்சமற்ற, அபத்தமான பெருமையின் வெளிப்படையான அடையாளம் ஆகும். பலரின் அத்துமீறல் மனிதர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலை சீரழித்து விட்டது. நாம் அனைவரும் நாம் செய்த செயல்களுக்கு கடவுள் முன்பாக பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இருப்பினும் போப் பிரான்சிஸ் கடந்த ஆண்டு நடந்த எந்த ஒரு சம்பவத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை. கடந்த ஆண்டில் நிகழ்ந்த உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு போப் பிரான்சிஸ் பலமுறை குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*