ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன்

கருணாநிதியை ஏமாற்ற முயற்சித்தாரா ரஜினி

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

ஆர்.கே.நகரில் பணம் ஜெயித்தது என்று கமல் கூறியது குறித்து டிடிவி தினகரன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “ஆர்.கே.நகரில் பணம் தான் வெற்றி பெற்றது என்றால் ஓட்டுக்கு ரூ.6,000 என்று மொத்தம் ரூ.120 கோடி கொடுத்தவர்கள்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அது நடக்கவில்லை. கமல்ஹாசன் என்ன எழுதி இருக்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. பணம்தான் வெற்றி பெற்றது என்றால் ஆர்.கே.நகர் தொகுதி மக்களை கமல்ஹாசன் கேவலப்படுத்துகிறாரா? அவர்கள் மீது குறை சொல்கிறாரா? அவர் சொல்வது போல பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டிருந்தால், அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்க வேண்டும். தேர்தலில் பணம் பட்டுவாடா செய்தோம் என்று கமல்ஹாசன் எதை வைத்து சொல்கிறார்? அ.தி.மு.க.வாக இருக்கட்டும், தி.மு.க.வாக இருக்கட்டும், தோற்றுப் போனவர்கள் சொன்ன வார்த்தைதான் அது. ஆனால் இதை கமல்ஹாசன் சொல்கிறார் என்றால் அது அவரது தரத்தைதான் காட்டுகிறது. இதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆர்.கே.நகர் தொகுதி மக்களை அவர் கேவலப்படுத்துவதாகவே நான் கருதுகிறேன். இந்த பிரச்சினைக்கு ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் ஏற்கனவே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள். திரும்ப திரும்ப சொல்வதால் பொய் உண்மையாகி விடாது” என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*