கருணாநிதியை ஏமாற்ற முயற்சித்தாரா ரஜினி

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

புதுக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவேன் என்று கூறிய ரஜினி, அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவர் தனது ஆதரவாளர்களை அறிந்துகொள்ள வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்ட் ஆப்பை அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்குபடி கூறினார். இந்நிலையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று ரஜினி சந்தித்தார்.

முதுமை காரணமாக ஓய்வில் இருக்கும் கருணாநிதியின் உடல் நலம் விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்துக்கள் கூற விரும்புவதாகவும் சொல்லியே ரஜினி தரப்பில் இருந்து கருணாநிதி குடும்பத்திடம் சந்திப்புக்கு அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. ரஜினி கேட்டதால் அனுமதியும் வழங்கப்பட்டது. ரஜினி வருகிறார் என்பதை கேள்விப்பட்டதும் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் அங்கு வருகிறார்.  வீட்டுக்கு வந்த ரஜினியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று கருணாநிதியை சந்திக்க வைக்கிறார் ஸ்டாலின். அச்சந்திப்பின் போது ஸ்டாலின் இறுகிய முகத்துடன் அருகில் நின்று கொண்டிருந்தார் காரணம் ரஜினியின் தவறான அணுகுமுறை.

கருணாநிதியின் உடல்நிலை சரியில்லாததால் அவர் யாருடனும் உரையாட இயலாது. பேராசிரியரின் பெயரைக் கூட காதருகே சென்று சத்தமாக கூறினால்தான் அவருக்கு புரியும் எனும் நிலையில்,  புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த ரஜினி, அரசியலில் இறங்கியிருக்கிறேன் என ஆசிர்வாதம் கேட்டிருக்கிறார். கருணாநிதியின் கையை பற்றிக் கொண்டு ஆசிர்வாதம் பெற்றதாக பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ரஜினி புதுக்கட்சி துவங்குவதற்கு ஆசிர்வாதம் கேட்டிருக்கலாம், கருணாநிதி அவர்களும் ஒரு மரியாதைக்காக ஆசிர்வாதம் செய்திருக்கலாம்” என்று கூறினார். மேலும் அவர், “திராவிட கட்சியை எந்த கட்சியாலும் அழிக்க முடியாது” என ரஜினியை குறிப்பிடும்படி பேசினார். ரஜினியின் சந்திப்பில் ஸ்டாலினுக்கு அதிருப்தி என்பதற்கு இந்த புகைப்படமே சான்று. ஸ்டாலினின் முகத்தில் சந்தோஷமில்லாமல் நிற்கிறார். இது திமுக தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சிஸ்டம் சரியில்லை என திராவிட கட்சிகள் மீது குறைகூறும் ரஜினி, தனது ஆன்மீக அரசியலுக்கு அடித்தளம் போட கருணாநிதி என்ற திராவிட கட்சி தலைவரை ஏன் நாட வேண்டும். ஆன்மீக அரசியல் என்பது உண்மை, உழைப்பு, நேர்மை என கதை கூறி வருகிறார் ரஜினி, பாஜக போன்ற மத அரசியலை தான் அவர் இங்கு அறிமுகப்படுத்துவார்.

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*