மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

pc: NDTV

மராட்டியத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பேஷ்வா படையினருக்கு இடையே நடந்த போரில் ஆங்கிலேய படை வென்றது. அவர்களின் படையில் மகர் எனும் தலித் பிரிவினரும் பங்கேற்று இருந்ததாக வரலாறு கூறுகிறது.எனவே இந்த போர் வெற்றியை ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதி மகர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி கடந்த 1-ஆம் தேதி புனேயின் பிமா-கோரேகானில் உள்ள போர் நினைவுச்சின்னம் நோக்கி லட்சக்கணக்கானோர் திரண்டு வந்தனர்.

அங்கே வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ் மூலம் கலவரம் மூண்டதில், ராகுல் பதங்கலே என்ற 28 வயது இளைஞன் கொல்லப்பட்டார். இதனை சில முன்னணி ஊடகங்கள் திரித்து கூறுகின்றனர். இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் டாக்டர்.அம்பேத்கரின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் நேற்று பந்த் நடைபெற்றது. இதில் 250 தலித் அமைப்பை சார்ந்தவர்களும், அனைத்து இந்திய மாணவர்கள் அமைப்பை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர். பாஜக அரசின் மெத்தனப்போக்கால் நேற்றும் கலவரம் வெடித்தது. வாகனங்கள் எரிக்கப்பட்டு, கடைகள் சேதப்படுத்தப்பட்டன, முழு அடைப்பையொட்டி மாநிலம் முழுவதும் பாதுகாப்புக்காக ஆங்காங்கே காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். வன்முறை சம்பவம் தொடர்பாக மும்பையில் ஏராளமானோரை விசாரித்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தை திரும்ப பெறுவதாக பிரகாஷ் அம்பேத்கர் மாலையில் அறிவித்தார். இதையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். பின்னர் சாலைகளில் வாகனங்கள் இயங்க தொடங்கின. ரெயில் போக்குவரத்தும் சீரானது. கடைகளும் திறக்கப்பட்டன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*