உடுமலை: கமல்ஹாசன் மீது வழக்கு?

pc: PTI

போயஸ்கார்டனில் ரெய்ட்

பேருந்து சேவை முடங்கியது..!

ஆர்.கே.நகர் மக்களை கேவலப்படுத்துகிறார் கமல்: டிடிவி தினகரன்

அரசியலில் இறங்கி மக்கள் சேவை செய்ய விரும்புதாக கூறிய கமல்ஹாசன், சில வாரங்களாக பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதனால் அரசியல் சார்ந்து எந்த விமர்சனத்தையும் பதிவு செய்யாமல் அமைதி காத்து வந்தார். இந்நிலையில், கமல்ஹாசன் வார இதழ் ஒன்றுக்கு எழுதும் தொடரில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து விமர்சித்தார். அதற்கு, வாக்காளர்களை இழிவுபடுத்துவதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் குறித்து கமல், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வெற்றி விலைக்கு வாங்கப்பட்டது என்றும், ஊரறிய நடைபெற்ற குற்றத்திற்கு மக்களும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பது சோகத்தை அளிக்கிறது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி ஜனநாயகத்தின் வீழ்ச்சி” என்று எழுதி இருந்தார்.

இதை தொடர்ந்து வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக நடிகர் கமலஹாசன் மீது உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடுமலைப்பேட்டையில் வழக்கறிஞர் சாதிக்பாஷா என்பவர், கமல் கூறிய கருத்து தமிழக வாக்காளர்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதென்றும் வாக்காளர்களை பிச்சைகாரர்கள் போன்று விமர்சித்த கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறும் உடுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*