மக்கள் கஷ்டத்தை கமல் அறிய முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

பீட்டாக்கு ஆதரவாக ரஜினிகாந்த்: கிடா வெட்டுக்கு மறுப்பு

ரஜினியின் ஆன்மீக அரசியல் ஒரு பித்தலாட்டம் :கி.வீரமணி

மயிலாப்பூரில் வேட்டி,சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து பொங்கல் பரிசுகளை வழங்கினார் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், கமல் போன்றவர்களால் மக்களின் கஷ்டத்தை அறிய முடியாது என தெரிவித்தார்.

இதுகுறித்து அவர், “தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. இலவச வேட்டி சேலை திட்டம், சைக்கிள், லேப்டாப் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் கமல் நிறுத்தச் சொல்கிறாரா? அதிமுக அரசு மீது கமல் ஆதாரமின்றி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். மாடி மேல் இருந்து மக்களை பார்க்கும் கமல் போன்றவர்களால் மக்கள் கஷ்டத்தை அறிய முடியாது. குடிசைகளில் இருந்து மக்களை சந்திப்பவர்கள் நாங்கள், ஆர்.கே நகரில் ஆயிரக்கணக்கான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஆனால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் மூலம் வாக்குகளை கொள்ளையடித்து விட்டனர்” என்று பேசினார்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி 3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்..!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவு..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*