500 ரூபாய்க்கு ஆதார் விபரங்கள் விற்பனை

நீதிமன்ற உத்தரவையும் மீறி 3-வது நாளாக தொடரும் போக்குவரத்து ஊழியர் போராட்டம்..!

போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் ஆதரவு..!

ஆதார் அட்டைக்காக குடிமக்களின் விபரங்கள் பெறப்பட்டு அவை சேகரிப்படும் திட்டம் அமல் செய்யப்பட்டதில் இருந்தே, அதை சுற்றி பல சர்ச்சைகள் எழுந்தபடி இருந்தன. ஆனால், வெறும் ஐநூறு ரூபாய் அளித்தால் பல கோடி நபர்களின் தனிப்பட்ட விபரங்களை உங்கள் வாட்ஸப்பிற்கு வரச் செய்யலாம் என்ற செய்தி தற்போது வெளியாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

தி ட்ரிப்யூன் நடத்திய புலன் விசாரணையில், யூ.ஐ.டி.ஏ.ஐ-யில் பதிவு செய்யப்பட்டிருக்கும் எந்த நபரின் விபரத்தையும் வெறும் ஐநூறு ரூபாய்க்கு பெற்றுவிட முடியும் என்பது தெரிய வந்திருக்கிறது. இந்த வியாபாரத்தை நடத்திக் கொண்டிருக்கும் அனாமதேய நபர்கள் வாட்ஸ்பட் போன்ற தனிநபர் சாட் தளங்களில் இயங்கி தங்கள் பிசினஸை நடத்த வாடிக்கையாளர்களை தேடுவதாக தி ட்ரிப்யூன் தெரிவிக்கிறது. வெறும் ஐநூறு ரூபாய் அளித்தால், யூ.ஐ.டி.ஐ.ஏயில் பதிவு செய்யப்பட்டிருக்கும் தனி நபர் விபரங்களை பெற ஒரு லாகின் ஐடியும் பாஸ்வேர்டும் கொடுக்கப்படுகிறது.

வெளியாகியிருக்கும் செய்தியின்படி, யூ.ஐ.டி.ஏ.ஐ-யில் பதிவு செய்திருக்கும் எந்த நபரின் விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பெற முடியும் என்பது தெரியவந்திருக்கிறது.பெயர், முகவரி, புகைப்படம், மின்னஞ்சல் முகவர் மற்றும் மொபைல் எண் உட்பட அத்தனை விபரங்களையும் இதன் மூலம் பெற்றுவிட முடியும் என ஊடகவியலாளர் நிரூபித்திருக்கிறார்.

இப்படி தனி நபர் விபரங்களை விற்கும் வியாபாரம் ஆறு மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டதாக தெரிய வந்திருக்கிறது.

பீட்டாக்கு ஆதரவாக ரஜினிகாந்த்: கிடா வெட்டுக்கு மறுப்பு

ரஜினியின் ஆன்மீக அரசியல் ஒரு பித்தலாட்டம் :கி.வீரமணி

மராட்டிய போராட்டம் முற்று பெற்றது: முழு விபரம்?

ரஜினிக்கு அழுத்தமான பதிலை பதிவு செய்த ஸ்டாலின்..!

ரஜினியின் கட்சியில் சேர பதவி துறந்தாரா லைக்கா CEO உண்மை என்ன?

மருத்துவர்கள் எதிர்ப்பு மசோதாவை கைவிட்டது மோடி அரசு..!

கவர்னருக்கு தஞ்சையில் திமுகவினர் கருப்புக் கொடி..!

இன்று முத்தலாக் மசோதா:அவையில் அமளி ஏற்படலாம்?
”என் பேச்சை திரித்துக் கூறுகிறார்கள்”- பிரகாஷ்ராஜ்

வெளியுறவு செயலாளராக விஜய் கோகலே நியமனம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*