சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சிபிஐயின் சிறப்பு நீதிமன்றம் இருபது ஆண்டுகளாக தொடரும் மாட்டுத் தீவன வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பு வெளியான பிறகு ட்விட்டரில், “ பாஜகவின் அராஜக ஆட்சிக்கு அடி பணிவதை விட, சமூக நீதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் சமத்துவத்திற்காகவும் சந்தோஷமாக சாவேன்” என்று எழுதியிருக்கிறார் குற்றம் சாட்டப்பட்ட லாலு பிரசாத் யாதவ்.

பாஜகவின்  “ எங்களை பின்பற்றவில்லையென்றால், எங்களை பின்பற்றுமாறு செய்வோம்” என்ற அராஜக தார்மீகத்திற்கு அடிபணிவதற்கு பதிலாக சமூக நீதிக்காக நான் என்னை மாற்றிக் கொண்டு சந்தோஷமாக உயிரை விடுவேன்” என்று அவருடைய அதிகாரப்பூர்வாமான ட்விட்டர் அக்கவுண்டில் ட்வீட் வெளியிட்டிருக்கிறார் லாலு.

மாட்டு தீவன ஊழல் வழக்கில் பீஹாரின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் உட்பட நால்வருக்கு 3.5 வருடங்கள் சிறை தண்டனை விதித்திருக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*