என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

டொனால்ட் ட்ரம்பின் முதிர்ச்சி மற்றும் ஆளுமை குறித்து உலகமே கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், ‘ தன்னுடைய அறிவென்னும் சொத்தை நினைத்து பெருமை படுவதாக’ டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டரில் கூறியிருப்பது சிரிப்பை உண்டாக்குவதாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பெரும் பணக்காரராக இருந்து அமெரிக்க பிரதமர் தேர்தலில் வென்றவர் டொனால்ட் ட்ரம்ப். அரசியல் குறித்தோ, ஜனநாயகம் குறித்தோ , மக்கள் நலன் குறித்தோ எந்த புரிதலும் இல்லாத வெறும் மதவாத, இனவாத வெறியராக இருப்பவர் டொனால்ட் ட்ரம்ப். டொனால்ட் ட்ரம்ப் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்கா முழுவதும் பரவியிருக்கும் வன்மம் பெருமளவு.

எழுத்து பிழையோடு ட்விட்டரில் டொனால்ட் ட்ரம்ப் பதிவிடும் ட்வீட்டுகள் பலரும் பார்த்தவையாகவே இருக்கக்கூடும். ட்ரம்ப் அதிபர் அலுவலகத்தில் வேலை செய்கிறாரோ இல்லையோ, ட்விட்டரில் கண்டிப்பாக இரண்டு மூன்று ட்வீட்டுகள் போடாமல் தூங்க மாட்டார்.

சமீபத்தில், அவருடைய மன முதிர்ச்சி குறித்து வரும் கமெண்டுகளை எல்லாம் பார்த்து வருத்தப்பட்ட ட்ரம்ப், “ என்னுடைய இரண்டு பெரும் சொத்துக்களாக நான் நினைப்பது என்னுடைய அறிவையும், மன முதிர்ச்சியையும் தான். ஒரு வெற்றிகரமான பிசினஸ்மேனாக இருந்து, டிவி ஸ்டாராக மாறி பின்னர் முதல் முயற்சியிலேயே போதே அமெரிக்க அதிபராகவும் நான் ஆகியிருக்கிறேன். நான் ஒரு ஜீனியஸ்” என எழுதியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*