நோட்டீஸ் கொடுக்காமல் சஸ்பெண்ட் செய்யக் கூடாது: நீதிமன்றம்..!

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

போக்குவரத்து ஊழியர்கள் ஐந்தாவது நாளாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், நோட்டீஸ் கொடுக்காமல் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
ஏற்கனவே ஒரு லட்சம் போக்குவரத்து  ஊழியர்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி விட்ட நிலையில். இன்னும் சில நாட்களில் அவர்கள் சஸ்பெண் ஆகும் ஆபத்து  உருவாகியிருக்கிறது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சட்டவிரோத போராட்டம் என அறிவித்ததுடன், போராட்டத்திற்கும் தடை விதித்தது. தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத தொழிலாளர்கள்  மீது அரசு நடவடிக்கை  எடுக்கலாம் என்றும் கூறியிருந்தது. ஆனாலும், தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
இந்நிலையில், பஸ் ஸ்டிரைக்கிற்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பதில் மனுவின் அம்சங்கள் மற்றும் அரசுத் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த உயர்நீதிமன்றம், போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையினை வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், ஸ்டிரைக்கினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியது.
ஸ்டிரைக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கவேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை  ஏற்க மறுத்துவிட்டது. 14 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் கொடுக்காமல் போராட்டம் நடத்துவதாகவும், முன்னறிவிப்பு இல்லாத ஸ்டிரைக்கை ஏற்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அதேசமயம், போராட்டம் நடத்தும் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ்  கொடுக்காமல் அவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*