500 ரூபாய்க்கு ஆதார் விபரங்கள்: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

500 ரூபாய்க்கு ஆதார் விபரங்கள்: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்கு

500 ரூபாய்க்கு லட்சக்கணக்கான ஆதார் விபரங்கள் விற்பனை செய்யப்படுகிறது என செய்தி வெளியிட்ட ‘டிரிப்யூன்’ பத்திரிகையாளர் ரச்சனா கைரா மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன் ‘டிரிப்யூன்’ பத்திரிகையில் இந்திய குடிமக்களின் ஆதார் விபரங்கள் விற்பனை செய்யப்படுகிறது என செய்திகள் வெளியானது. இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் எல்லாம் ஆவேசம் அடைந்தனர். அனைவரும் ஆதார் அமைப்பிற்கும், மத்திய அரசிற்கும் எதிராக கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர். இது தேசிய அளவில் சர்ச்சையாக மாறியது.

இந்நிலையில், தற்போது அந்த மோசடியை கண்டுபிடித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் கைரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதாய் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் சண்டீகர் போலீசார் மூன்றிற்கும் மேற்பட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கு அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மோசடியை செய்த நபர்கள் மீது முதலில் நடவடிக்கை எடுக்குமாறு பத்திரிக்கையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*