ஆட்டோ டிரைவரை வைத்து பேருந்து ஓட்டியதால் விபத்து..!

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

பேருந்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வீம்பு காட்டி வருவதோடு, லாறி ஓட்டுகிறவர்கள்.ஆட்டோ ஓட்டுகிறவர்கள்,ஷேர் ஆட்டோ டிரைவர்களை வைத்து அரசு பேருந்தை ஓட்டி வருகிறது. இதனால் தமிழகம் முழுக்க விபத்து அதிகரித்து வௌர்கிறது. இந்நிலையில்,  ட்டோ டிரைவர் ஓட்டிச்சென்ற அரசுப் பேருந்து, மின்கம்பத்தின்மீது மோதியது. மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த நிலையில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தனர். அரசு போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், தற்காலிக ஊழியர்களைக்கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த டேனியல் என்பவரும் அரசுப் பேருந்து  ஓட்ட விண்ணப்பித்திருந்தார். இவர், அந்தப் பகுதியில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர். பணிக்குத் தேர்வுசெய்யபபட்ட டேனியல், நேற்று மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருநகருக்கு பேருந்தை ஓட்டிச்சென்றார்.

திருநகர் அருகே ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது, சாலையில் இருந்த மின்கம்பத்தில் மோதியது. மோதிய வேகத்தில் மின்கம்பம் வளைந்தது. நல்ல வேளையாக வயர்கள் அறுந்து பேருந்து மீது விழவில்லை. இதனால், பயணிகள் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியதோடு, அலறியடித்து பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர்.

இதற்கிடையே, சம்பவ இடத்துக்கு இரு துறையைச் சேர்ந்த அதிகாரிகளும் வந்தனர். மின்கம்பத்தைச் சரிசெய்ய இழப்பீடு தர வேண்டுமென மின்வாரியத்தினர் அரசு  அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததால், தகராறு உருவாகும் சூழலைப் பார்த்த டேனியல் அங்கிருந்து ஓடிவிட்டார்.

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*