”என்னை பெயர் சொல்லி அழைத்தார் கருணாநிதி”-வைகோ

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

கருணாநிதியை கோபலபுரத்தில் சென்று சந்தித்த வைகோ உணர்ச்சிகரமான சந்திப்பு என்று கூறினார். தன்னை அடையாளம் கண்டு பெயரைச்சொல்லி அழைத்தது உணர்ச்சிப்பூர்வமான சந்திப்பு என்றார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரவு 7 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். அவரோடு தனியாக ஆலோசனை நடத்திய வைகோ அவரது காரிலேயே அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.

இரவு 8 மணி அளவில் கருணாநிதியை வைகோ சென்று பார்த்தார். அப்போது, யார் என்று தெரிகிறதா? என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் கேட்டவுடன், புன்னகை பூத்தவாறு வைகோ என கருணாநிதி உணர்த்தினார்.

சந்தித்துவிட்டு வெளியே வந்தபின் நிருபர்களிடம், “அரசியலில் என்னை வளர்த்து ஆளாக்கிய, இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது என்னை இயக்கிய அண்ணன் கருணாநிதி அவர்களைப் பார்த்தேன். நலமாக இருக்கிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பக்கபலமாக, உறுதுணையாக செயல்படுவது என்று எங்கள் இயக்கம் ஒருமனதாக முடிவு செய்தது என்று நான் கூறினேன்.கருணாநிதியின் கரத்தைப் பற்றிக்கொண்டேன். மனதை நெகிழச் செய்கின்ற உணர்ச்சி மயமான சந்திப்பாக எனக்கு அமைந்தது” என்று வைகோ கூறினார்.

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*