திரையரங்குகளில் தற்காலிகமாக தேசிய கீதம் ஒலிக்காது : மத்திய அரசு

”என்னை பெயர் சொல்லி அழைத்தார் கருணாநிதி”-வைகோ

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

 

திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும் எனும் சட்டம் தொடர்பாக புதிய சுற்றறிக்கை வரும் வரை, அந்த சட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு தெரிவித்திருக்கிறது.

2016 நவம்பரில், நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “ இந்தியாவின் அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டும்; அரங்கில் இருப்பவர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வேண்டும்” என்று அறிவித்தது. தாய் மண் மீது கொண்டிருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்கான தருணமாக இதை பார்ப்பாதாகவும் நீதிமன்றம் நியாயப்படுத்தியது.

ஆனால், இதற்கு முரணான குரல் நீதிமன்றத்திலேயே ஒலிக்கத் தொடங்கியது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.வொய்.சந்திரசூட்  2017 அக்டோபர் மாதம் மனு ஒன்றை விசாரித்த வேளையில், “ எந்த ஒரு இந்தியனும் தேசப்பற்றை சட்டைப்பையில் கொண்டு செல்ல வேண்டுமென்பது கட்டாயமில்லை. தேசிய கீதம் ஒலிப்பதனால் திரையரங்குக்கு யாரும் ட்ரவுசர் அணிந்து வரக் கூடாது என்று அடுத்து சொல்வோமா? இந்த கலாச்சார கட்டுப்பாட்டிற்கு எது தான் எல்லை?” என கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில், மத்திய அரசே இந்த பிரச்சினையை கையாளட்டும் என ஒதுக்கிவிட்டது உச்சநீதிமன்றம். இதை தொடர்ந்து இதற்கென ஒரு கமிஷன் அமைத்த உள்நாட்டு விவகாரங்கள் அமைச்சகம் ‘ புதிய சுற்றறிக்கை வரும் வரையில் இந்த திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிக்கப்பட வேண்டாம்’ என தற்போது அறிவித்திருக்கிறது.

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*