“முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்கின்றனர்” : ஒபிஎஸ் பாய்ச்சல்..!

வேலைநிறுத்தத்தை கைவிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என  சட்டசபையில்  முதலமைச்சர் மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேண்டுகோள் வைத்தனர்.போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர், தொமுச தொழிற்சங்கத்தினரை அழைத்துப்பேச வேண்டும் என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் பொது மக்களின் நலன் கருதி போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். எதிர்க்கட்சி தலைவர், கட்சி தலைவர்கள் அவரவர் தொழிற்சங்கங்களிடம் பேசி பணிக்கு திரும்ப வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி  கூறினார்.சட்டசபையில் பேசிய மு.க ஸ்டாலின்  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எங்களது தொழிற்சங்கங்களை அழைத்துப் பேசத் தயார். ஆனால் முதலமைச்சர் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறினார். துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும் போது
போக்குவரத்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடக்கும்போதே, பேச்சுவார்த்தை தோல்வி என புரளி கிளப்பியது திமுகவும், கம்யூ. கட்சியும்தான்

முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்கின்றனர் என கூறினார்.போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் துணை முதலமைச்சர் பேசியுள்ளார்  என ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார்.

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*