ஆதாரங்களை அழித்ததா யோகி அரசாங்கம்: பி.ஆர்.டி மருத்துவமனை தீ விபத்து

pc: ANI

”என்னை பெயர் சொல்லி அழைத்தார் கருணாநிதி”-வைகோ

என்னுடைய மிகப்பெரிய சொத்தே என் அறிவு தான் : டொனால்ட் ட்ரம்ப்

ரஜினியின் முத்திரைக்கு ஆபத்து: உரிமை கோரும் மும்பை நிறுவனம்

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 60-க்கும் அதிகமான குழந்தைகள் இறந்த மருத்துவமனை. யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை மறுத்தது. மருத்துவமனை நிர்வாகம் சரியில்லை என 9 பேர் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிலே வெளியில் இருந்து ஆக்ஸிஜன் வாங்கி வந்து சில குழந்தையை காப்பாற்றிய கஃபீல் கானும் ஒருவர், இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்காக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, கஃபீல் குற்றமற்றவர் என அறிவித்ததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். யோகியின் அரசாங்கம் மீது விழுந்த மாபெரும் குற்றச்சாட்டு இந்த சம்பவம். இந்நிலையில் கடந்த செவ்வாய் அன்று பாபா மருத்துவமனையின் அலுவலகம் தீப்பற்றி எரிந்திருக்கிறது.

இந்த தீவிபத்தில் உயிர் சேதம் ஏதுமில்லை. எனினும் குழந்தைகள் இறப்பு சம்பந்தமான அத்தனை ஆதாரங்களும் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது யோகி அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போக்குவரத்து ஊழியர் பணத்தை கையாடல் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தண்டனை?

போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கலாமே: நீதிபதி…!

சீமான் மீது பாயும் நமல் ராஜபக்சே..!

சமூக நீதிக்காக சந்தோஷமாக உயிர்விடுவேன்: லாலு

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*