கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரெய்ட்..!

“முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்கின்றனர்” : ஒபிஎஸ் பாய்ச்சல்..!

திரையரங்குகளில் தற்காலிகமாக தேசிய கீதம் ஒலிக்காது : மத்திய அரசு

”என்னை பெயர் சொல்லி அழைத்தார் கருணாநிதி”-வைகோ

ஆண்டாள் தொடர்பாக வைரமுத்து எழுதிய கட்டுரை தொடர்பாக எழுந்த சர்ச்சைகளை அடுத்து அவர் வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜகவினர் குரல் கொடுத்து வருகிறார்கள்.கவிஞர் வைரமுத்து, ஆண்டாளைப் பெருமைப்படுத்துகிறேன் என்று பேசவும், எழுதவும், ஆரம்பித்து சிறுமைப்படுத்தியிருக்கிறார். தேவதாயாக, பெண் ஆழ்வாராக பெருமை சேர்த்தவரை, தேவதாசியாக சித்தரிக்க எப்படி மனம் வந்தது?தமிழைப் பழித்தவரை தாய் தடுத்தாலும் விடேன் என்ற பாரதியின் வார்த்தையை தமிழ் வளர்த்த ஆண்டாளைப் பழித்தவரை யார் தடுத்தாலும் விடோம் என்பதே எங்களது நிலை. மனது புண்பட்டால் வருந்துகிறேன் என்பது, பண்படாமல் எழுதிய வாசகங்களுக்கு பதில் ஆகாது.
உடனே கட்டுரையை மாற்றி, எழுத்து பூர்வமாக பதிவு செய்வது மட்டுமின்றி, இனிமேல் இதுபோன்று உணர்வுகளை காயப்படுத்த மாட்டேன் என மன்னிப்பு கேட்க வேண்டும். இப்போது நீங்கள் கொடுத்திருக்கும் மறுப்பு ஏதோ வெறுப்பை மனதில் வைத்தே கொடுத்தைப் போல் உள்ளதால் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*