போராட்டம் தொடரும்..!

பஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையில் ரூ.750 கோடி உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்தார். இதனை ஏற்று பணிக்கு திரும்பும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இது குறித்து  சி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-
தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பற்றி எதுவும்   அறிவிக்கப்படவில்லை. அதற்காகத்தான் இந்த போராட்டம் நடக்கிறது. ஊதிய மாற்று காரணி குறித்து எதுவும் கூறாமல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவை தொகையை அறிவித்து இருப்பது ஏமாற்று வேலையாகும். இதனை ஏற்க இயலாது எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*