வலுக்கிறது போக்குவரத்து ஊழியர் போராட்டம்…!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் ரெய்ட்..!

“முன்அறிவிப்பின்றி வேலைநிறுத்தம் செய்கின்றனர்” : ஒபிஎஸ் பாய்ச்சல்..!

திரையரங்குகளில் தற்காலிகமாக தேசிய கீதம் ஒலிக்காது : மத்திய அரசு

”என்னை பெயர் சொல்லி அழைத்தார் கருணாநிதி”-வைகோ

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 6-வது நாளாக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்தனர். போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள், கோட்டங்கள், பணி மனைகள் முன்பு பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் தொழிலாளர்கள் திரண்டு முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட் டது.

ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், 2.57 மடங்கு ஊதிய உயர்வை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் காலவறையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிஐடியு, தொமுச, ஏஐடியுசி உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இதனால், தமிழகம் முழுவதும் அரசு பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தனியார் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாததால் மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். தற்காலிகப் பணியாளர்களால் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மின்சார ரயில்களிலும் வெளியூர்களில் தனியார் பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பணிக்குத் திரும்ப வேண் டும் என முதல்வர் கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ள நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மேலும், ஆர்ப்பாட்டம், மறியல் என நாளுக்கு நாள் போராட்டத்தை தீவிரப் படுத்தியும் வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம், கோட்ட அலுவலகம், பணிமனைகள் என 60-க்கும் மேற்பட்ட இடங்களை தொழிலாளர்கள் தங்கள் குடும்பத் தினருடன் நேற்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர்.

மழையிலும் ஆர்ப்பாட்டம்

சென்னை பல்லவன் இல்லம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டனர். பெண்களும், குழந்தைகளும் அதிக அளவில் திரண்டதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின்போது திடீரென மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்துகொண்டே அவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வதற்காக தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் தி.நகரில் நேற்று மாலை நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தொமுச பொருளாளர் கி.நடராஜன் ஆகியோர் கூறியதாவது: ஊதிய உயர்வு தொடர்பாக எங்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தைக்கும், பத்திரிகைகளில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்கும் வித்தியாசம் இருக்கிறது. குறிப்பாக, புதிய ஊதிய ஒப்பந்த விவகாரத்தில் 1.1.2018 முதல் புதிய ஊதிய உயர்வு என்று அறிவித்துள்ளனர். ஆனால், புதிய ஊதிய ஒப்பந்தம் என்பது 1.9.2016 முதல் அமல்படுத்திருக்க வேண்டும். இதுகுறித்து தெளிவாகவும் இல்லை. எனவே, தற்போது ஏற் படுத்திருப்பதாக கூறியுள்ள புதிய ஊதிய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, எங்களை அழைத்துப் பேசி புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், எங்களது போராட்டம் தீவிரமடையும்.

தற்போது, சில இடங்களில் தொழிலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதை சட்டப்படி எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள ஓட்டுநர்களுக்கு இணையான ஊதிய உயர்வைத்தான் கேட்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் தொழிலாளர் துறை அலுவலகங்கள் முன்பு புதன்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 40 இடங்களில் நடக்கவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பார்கள்.

கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம். பேருந்து சேவை பாதிப்புக்கு நாங்கள் காரணம் அல்ல. தமிழக அரசுதான் என்பதை உணர்ந்து உடனடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, போராட்டத் தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். தற்காலிக ஊழியர்களை தாக்கியதாகவும் பணிக்கு வந்தவர்களுக்கு இடையூறு செய்ததாகவும் சில தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் கோட்டத்தில் மட்டும் 20 தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை பாதிப்பு

இந்நிலையில், சென்னை கடற்கரை – வேளச்சேரி மார்க்கத்தில் மின்வயர் அறுந்து விழுந்ததால் சுமார் 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*