அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

மத்திய அரசாங்கம் ஆதார் அடையாள அட்டையை நம் அத்தியாவசிய தேவைகள் அனைத்திலும் இணைக்கும்படி வலியுறுத்தி வருகிறது. இதே வேளையில் பல லட்சம் ஆதார் விபரங்கள் பணத்துக்காக விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதார் அடையாள அட்டை இணைப்பு, தனி மனிதனை மட்டுமல்லாது தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் விதமாக மாறியிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து இந்திய மாணவார்கள் அமைப்பு நாளை போராட்டம நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆதார் அடையாள அட்டையை ரேஷன் கார்டுடன் இணைக்காததால், உணவு பொருட்கள் மறுக்கப்பட்டு ஒருவர் இறந்த சம்பவம் நடந்தேறியிருக்கிறது. அதேபோல் முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியம் மறுக்கப்பட்டு வருகிறது. இணையதள சேவைகள் கிராமப்புற மக்களை சரியாக சென்றடையவில்லை. ஆனால் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசாங்கம். ஆதார் விபரங்கள் வெளியாகும் உண்மையை வெளிக்கொண்டு வந்த ‘ட்ரிப்யூன்’ பத்திரிகையாளர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் இணைப்பை உடைக்கும் முயற்சியாக நாளை மதியம் 3 மணியளவில், டெல்லி பாராளுமன்ற சாலையில் அய்சா (அனைத்து இந்திய மாணவார்கள் அமைப்பு) சார்பாக போராட்டம் நடைபெறவுள்ளது.

ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*