ஜாய் ஆலுக்காஸ்: 2-ஆவது நாளாக ரெய்ட் தொடர்கிறது

8- வது நாள் ஸ்டிரைக் தொடர்கிறது..!

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

கேரள மாநிலம் திருச்சூரை தலைமை அலுவலகமாக கொண்டது ‘ஜாய் ஆலுக்காஸ்’ நகைக்கடை நிறுவனம். அமெரிக்கா, லண்டன், சிங்கப்பூர், மலேசியா என 11 நாடுகளிலும், இந்தியாவில் 11 மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் 21 இடங்களிலும் இதன் கிளைகள் இருக்கின்றன. இந்த நகைக்கடைகளில், மத்திய அரசின் வழிக்காட்டுதலின்படி விற்பனை நடைபெறாமல், பல கோடி வரி ஏய்ப்பு நடந்தியிருப்பதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாடு முழுவதும் 130 இடங்களில் உள்ள இந்த நகைக்கடைகளில் நேற்று திடீரென சோதனை நடத்தப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையால் வேலைக்கு வந்த ஊழியர்கள் கடைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், 2-ஆவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுபற்றிய மேற்படி தகவல்கள் வெகு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆதரிப்பேன்: தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*