ஆதாருக்கு பதில் மெய்நிகர் அடையாள அட்டை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் தங்கள் தனிப்பட்ட அடையாளங்கள் மற்றும் விவரங்கள் அடங்கிய ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு இந்த அடையாள அட்டையை பயன்படுத்த வேண்டும் என மத்திய அரசாங்கம் வலியுறுத்தியது. இதனால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இப்படி பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் வேளையில், ஆதார் விபரங்கள் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக ‘ட்ரிபியூன்’ பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்த சர்ச்சையால், தற்போது ஆதார் அடையாள அட்டைக்கு பதிலாக 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய மெய்நிகர் அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது மத்திய அரசாங்கம். மத்திய அரசின் இந்த திட்டத்தின் மீது முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் தளத்தில், ‘மத்திய அரசின் கட்டாயத்தின் பேரில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் ஆதார் எண் மற்றும் தகவல்களை பல சேவை நிறுவனங்களுடன் பகிர்ந்து விட்டனர். இனி புதிய பாதுகாப்பு அடுக்கை அறிமுகப்படுத்துவது என்பது, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்றதாகும்’ என்று பதிவு செய்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நம் இரண்டாம் பிரம்மகுப்தர் : மத்திய அமைச்சர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*