போராட்டம் வாபஸ்: இன்று முதல் பேருந்துகள் இயக்கம்

ஆதாருக்கு பதில் மெய்நிகர் அடையாள அட்டை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

வைரமுத்துவின் கொடும்பாவி எரிப்பு

அய்சா: ஆதார் இணைப்பை உடைக்கும் போராட்டம்

ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் இதில் பங்கேற்றனர். 8ஆவது நாளான நேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

பெரும்பாலான அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணிக்கு வராததால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை முடங்கியது. பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால், அலுவலகங்களுக்கு செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள், மாணவ- மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டனர். தற்காலிக ஊழியர்கள் மூலம் அரசுப் பேருந்துகளை இயக்கவும் அரசு நடவடிக்கை எடுத்தது. இதனிடையே, போக்குவரத்து தொழிலாளர் விவகாரத்தில், அரசு, தொழிலாளர் இடையே மத்தியஸ்தம் செய்ய நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது. அதன்பிறகு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வழக்கம்போல வேலைக்கு செல்வார்கள் என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்கு இடையூறு ஏதும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் கொடுமைகள் :இந்தியா வரும் அமெரிக்க பயணிகளுக்கு எச்சரிக்கை…!

கவிஞர் வைரமுத்து எழுத்து பூர்வமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்: தமிழிசை..!

போராட்டம் தொடரும்..!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது நம் இரண்டாம் பிரம்மகுப்தர் : மத்திய அமைச்சர்

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*