மது தோல்விக்கு ஜெயக்குமார்தான் காரணம்:தினகரன்

ஆர்.கே.நகரில் சுயேட்சை வேட்பாளராக வென்ற தினகரன்  பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால்  வெளிநடப்பு செய்தார். சட்டமன்றத்திற்குச் செல்வதற்கு முன்னால் பேசிய தினகரன்:-
“’எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரைதான் இரட்டை இலைக்கு மரியாதை இருந்தது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் தோற்றதற்கு அமைச்சர் ஜெயக்குமார் தான் காரணம். ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் மதுசூதனன் தோல்விக்கு காரணம். அ.தி.மு.கவில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது. விரைவில் ஒவ்வொன்றாக வெளியே வரும்’
சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்புச் செய்த பிறகு பேசிய அவர்:-
“என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான். சில அமைச்சர்களின் சதியால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் .எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார். குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னம் பெற்றும், ஆர்.கே.நகரில் தோல்வியடைந்துள்ளனர். தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம். தமிழக அரசு தண்ணீரை சேமிக்காத காரணத்தால் டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது .ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது.எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காகவே ஊதிய உயர்வு அளிக்கிறது அதிமுக அரசு.பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை மறுநாள் சந்திக்க உள்ளேன். என கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*