கலவரத்தை தூண்டுகிறார் எச்.ராஜா :திருமா கண்டனம்..!

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதியதாகவும், ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில் பேசியதாகவும் சொன்ன கருத்துக்களுக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா வைரமுத்துவதையும் பிரமாணர் அல்லாத பெண்களையும் வேசி என்று குறிப்பிட்டு பேசிய நிலையில், தொடர்ந்து பிரமாண பூஜாரிகளும்,கோவில் குருக்களும் வைரமுத்துவுக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார்கள். இது  தொடர்பாக பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்:-

“அரசியல் கட்சித் தலைவர்கள் மௌனம் காப்பதால்தான் ஹெச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். தொடர்ந்து சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் பேசிவரும் ஹெச்.ராஜாவை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். ஹெச்.ராஜாவின் பேச்சு எப்படியாவது தமிழகத்தில் கலவரத்தை மூட்டிவிட வேண்டும் என்ற தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது’ என்று கறாராக விமர்சித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*