வைரமுத்து மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

கலவரத்தை தூண்டுகிறார் எச்.ராஜா :திருமா கண்டனம்..!

வைரமுத்துவை மிரட்டுவோருக்கு வைகோ கண்டனம்…!

நாளை தொண்டர்களைச் சந்திக்கிறார் கருணாநிதி…!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தொடர்பாக இந்து முன்னணி  நகரச் செயலர் சூரி கொடுத்த புகாரின்பேரில் கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளின்கீழ் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

“தமிழை ஆண்டாள்” என்ற தலைப்பில் பாரம்பரியமிக்க தனியார் நாளிதழில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய கட்டுரையில், ஆண்டாள் குறித்து அமெரிக்க ஆய்வாளர் ஒருவரின் கருத்தை மேற்கோள் காட்டியிருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, “யாருடைய மனதினையும் புண்படுத்துவது நோக்கமல்ல. புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்” என்று வைரமுத்து வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனாலும், தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனக் குரல்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசியது தொடர்பாக இந்து முன்னணி  நகரச் செயலர் சூரி கொடுத்த புகாரின்பேரில் கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளின்கீழ் ராஜபாளையம் தெற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*